தரமணி : 30 டிசம்பர் 2016 !
3 years of தரமணி ஆல்பம் ..
யுவன் - நா.முத்துக்குமார் - ராம் ..
யுவன் , எனக்கான யுவனாக இருந்த கடைசி ஆல்பம் . அதுக்கு அப்புறமும் யுவன் இசையமைக்க தான் செய்யிறாரு .ஆனா, ஒரு போதும் எனக்கான யுவனாக உணர முடியவில்லை ..
நா.முத்துக்குமார் , படம் வெளிவருவதற்கு முந்தைய வருடம் ஒரு விருது விழாவின் மேடையில் சொல்வாரு ... " அடுத்த வருடம் , தரமணி படத்திற்காக யுவன் தேசிய விருது கண்டிப்பாக வாங்குவார்னு " ...
அந்த அளவுக்கு , தரமணி படத்தின் இசையின் மீது அதீத நம்பிக்கையை ,படத்தில் பணியாற்றிய அத்தனை பேரும் கொண்டிருந்தனர் .அதுவே , எனக்குள்ளேயும் ஒருவித எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது .இதற்கு முன் , இந்த trio ( யுவன் - நா.மு - ராம் ) செய்த சம்பவங்கள் அப்படி ..
கற்றது தமிழ் , தங்க மீன்கள் னு .. இன்றும் , நினைவில் வந்து முனுமுனுக்கிற பாடல்கள் அடங்கிய படங்கள் .
ஆல்பம் வெளிவருவதற்கு முன்னரே நா.முத்துக்குமார் மறைந்து போகிறார் .. அவருக்காகவே , ஒரு track ..
From the bottom of our hearts 💙
ராமும் , யுவனும் நா.முத்துக்குமார் பற்றி தன்னோட நினைவை சொல்வார்கள் ..
ராம் தன்னோட உரையில் கடைசியா ஒரு வரி சொல்வாரு ..
" தரமணி அவனுடைய இறுதி ஆல்பம்
அல்ல " ... Ya , that's true 💙
இப்பவும் நா.மு , நம்மளோட play list ல் வாழ்ந்துக் கொண்டு தான் இருக்கிறார் ..
யாரோ உச்சிக் கிளை மேலே ,
உன் பதில் வேண்டி ,
உன்னை உன்னை ,
காதல் ஒரு கட்டுக் கதை ,
ஒரு கோப்பை ,
பாவங்களை ....
ஆறு பாடல் .. எதையுமே என்னால் இது சிறந்தது , அது சிறந்தது னு வரிசைப்படுத்த முடியாது .. ஒவ்வொரு பாடலிலும் ஒரு உணர்வு புதைந்திருக்கும் ..
ஆல்பம் , முழுவதையும் கேட்ட பிறகு எனக்குள் எழுந்த ஒரே விஷயம் ..
நா.முத்துக்குமார் again deserved national award particularly this track ( உன் பதில் வேண்டி , பாவங்களை ) .. எனக்குள்ளே அப்படியொரு நம்பிக்கை இருந்தது .. ஆனால் , தேசிய விருது இந்த ஆல்பத்திற்கு கிடைக்கவில்லை ..
மனதை வென்று , மண்ணிற்குள் சென்றவனுக்கு .. மகுடங்கள் தேவையில்லாத ஒன்றாக இருந்திருக்கலாம் ..
இப்போதும் கர்வத்துடன் சொல்வேன் .இங்கு நா.முத்துக்குமார் விட்டுச்சென்ற வெற்றிடத்தை எவரும் இதுவரை நிரப்பவில்லை . அவனுக்கான , இடத்தை எவராலும் நிரப்பவும் முடியாது ..
நா.முத்துக்குமார் இந்த சகாப்தத்தில் வாழ்ந்த
பேரன்பின் ஆதி ஊற்று ..