சுவாரஸ்யமான மனிதர்கள் :
பஸ் காக ரொம்ப நேரம் காத்திருந்தேன் ..அந்த பஸ் ஸ்டாப்ல நான் மட்டும் தான் இருந்தேன் .. பொழுது போகாம எந்த பக்கம் இருந்து அதிக கார் வருதுனு எண்ண ஆரம்பிச்சேன் .. நான் உட்கார்ந்து இருக்கிற இடத்துல இருந்து கற்பனையாக ஒரு எல்லைக் கோடு வரைஞ்சுகிட்டு ! என்னுடைய வலது பக்கத்துல இருந்தும் , இடது பக்கத்துல இருந்தும் வரக்கூடிய கார் , இந்த எல்லைக் கோட்டினை கடந்தால் மட்டும் தான் count .. இங்குட்டும் அங்குட்டுமா 35 கார் count பண்ணேன் .. அதுக்கு மேல interest இல்ல !
கார்களை தவிர இன்னும் நிறைய மனிதர்கள் , நாய் , மாடுனு கடந்து போய்க் கொண்டே இருக்காங்க ..
யார் முகமும் மனசுல பதிய மாட்டிங்குது ..பார்க்கிற அந்த நொடி மட்டும் தான் அவர்களுடைய முகம் இந்த கண்ணுக்குள்ள நிற்குது !
என்னை கடந்து போக கூடிய உயிர்கள் இவ்வளவு இருக்கிற மாதிரி , நானும் யாரோ ஒருவருக்கு கடந்து போக கூடிய நபர்களில் ஒருத்தனாக இருப்பேன்ல ..
இப்ப இது பிரச்சினையில்ல..
நொடிப் பொழுதில் , நம் வாழ்வில் கடந்து போக கூடிய ஒரு சிலரின் முகம் மட்டும் ரொம்ப ஆழமாக பதிந்திருக்கும் .. அவர்களை திரும்பி இந்த வாழ்க்கையில் சந்திப்போமோ என்றால் , வாய்ப்பே இல்லனு தான் தோணுது ..
அப்படி இந்த வருட தொடக்கத்தில் இருந்து , யாராவது முகம் ரொம்ப ஆழமாக பதிந்திருக்கானு யோசித்து பார்த்தால் ரெண்டு பெண்களின் முகம் வந்து நிற்குது !
முதல் பெண் :
நொடிப் பொழுதில் கடந்து போயிருக்கேன் ..ஒரே ஒரு வார்த்தை மட்டும் பேசியிருக்கேன் ! ஆனால் , அவர்கள் முகம் அவ்வளவு ஆழமாக பதிந்து இருக்கு ..
சம்பவம் தொடக்கம் ....
இரவு 9:50 இருக்கும் ..போரூர் toll gate தாண்டி அண்ணா ஒருத்தர் வீட்டுக்கு போகனும் .. Toll gate தாண்டி , முதல் வளைவில் வளைந்து ரொம்ப தூரம் நடக்கணும் ..
Google map ல , அவர் வீட்டுக்கு முதல் வளைவுல செல்லாம ..இரண்டாவது வளைவில் சென்றால் சீக்கிரம் போய்டலாம்னு காட்டுச்சு ..சரினு நடந்தேன் !
சாலையின் ஓரத்தில் வரிசையாக கண்டெய்னர் லாரி ...( toll gate ல இருந்து கொஞ்ச தூரம் தான் ) லாரி பக்கத்துல 3 பொண்ணுங்க ..ஒருத்தங்க மட்டும் ரோஸ் கலர் சேலை , அதுக்கு மேட்ச்சா லிப்ஸ்டிக் ! இன்னும் ரெண்டு பேர் சுடிதார் ...
அவர்களை தாண்டி தான் அந்த ரெண்டாவது வளைவு இருந்துச்சு .. தூரத்தில் இருந்தே தெரிஞ்சுடுச்சு , அவர்கள் prostitute என ,
சேலை கட்டிய அந்த பெண் ,
" டேய் , மொட்ட .. எங்கடா போற ,
இங்க வாடா .. லாரி பின்னாடி வா ...
உன்ன தான்டா ! "
நான் எதுவும் பேசல , react பண்ணல , அப்படியே கேட்காத மாதிரி நடக்கிறேன் ..
அவர்களை தாண்டி வந்துட்டேன் .. கொஞ்ச தூரம் நடந்ததும் ரெண்டாவது வளைவு வந்துச்சு .. பார்த்தால் , பெரிய கேட் ஒன்று சின்னதா பூட்டு போட்டு இருக்கு .. அந்த கேட்டை தாண்டி போனால் , அவர் வீட்டுக்கு ஈஸியாக போயிடலாம் தான் .. ஆனால் , 🙄
Note : google map அதிகப்பட்சம் தப்பாக மட்டும் தான் சொல்லும் என்பதை நினைவில் கொள்கிறேன் !
இப்ப வேற வழியில்ல ..திரும்ப வந்த பாதையிலேயே நடந்து முதல் வளைவுக்கு போகனும் ..
போகிற வழியில் அவர்கள் வேற இருப்பாங்க !
நினைச்ச மாதிரியே , திரும்ப அந்த சேலை கட்டுன பெண் ,
" டேய் ... மொட்ட , என்னடா ?
இங்குட்டே சுத்திட்டு இருக்க...
லாரி பின்னாடி வாடா ,
குட்டிப்பாப்பா ! காசு கூட வேண்டாம்டா னு "
சொல்லிட்டே நெருங்க வந்துச்சு "
நான் ,
அக்கா " sorry ...க்கா " னு வேகமா அவர்களை தாண்டி வந்துட்டேன் ..
இவன் , என்னடி என்ன அக்கானு சொல்றானு ..பக்கத்துல இருந்த ரெண்டு பேர்ட அந்த பெண் சொல்லுது ..
அவர்கள் சிரிக்கிற சத்தம் என் காதுல கேட்குது ..
அவர்களை தாண்டி ரொம்ப தூரம் வந்துட்டேன் .. நான் மேல சொன்ன அத்தனை நிகழ்வும் , 20-25 நொடியில் நடந்திருக்கும் .. ஆனால் , அந்த அக்கா முகம் அவ்வளவு தெளிவாக பதிந்திருக்கு !
இனி திரும்ப அந்த அக்காவே பார்ப்பேனா என்றெல்லாம் தெரில ..
நான் கடந்து போன சுவாரஸ்யமான மனிதர்களுள் அவர்களும் ஒருத்தங்க 💙
இன்னொருத்தரை பற்றி நாளைக்கு சொல்றேன் !
With love ,
யுவன் 👣🙇🎈