Black board story room
6. பட்டதாரியாக நான் 🎓
(I AM GRADUATED)
அ. முதலில் எதிர்வினையாக .. (negative)🔕
இன்ஜினியரிங் படிச்சா நல்லா கை நிறைய சம்பளம்,இது நல்ல கல்லூரி,இங்கு தரமான கல்வி ,சிறப்பான உணவக ,இருப்பிட வசதி முக்கியமாக (no donation)...
போதும் டா சாமி...
"என்னை ஏமாற்ற இன்னும் எத்தனை பேர் தவம் கிடைக்குறனோ ? நான்அடைந்த அத்தனை ஏமாற்றங்களுக்கும் ஒர் முடி சூட்டும் விழாவாக ! நடைபெற காத்துக்கொண்டிருக்கிறது அந்த நாள் !
அன்றும் 2000 ஒவா கொடுத்து ஏமாறுகிறேன்..
ஏமாளி பட்டம் வாங்க கீழே நான் இருக்க ! வருடந்தோறும் என்னை போன்று பலரை ஏமாற்றியதற்காக டாக்டர் பட்டம் வாங்கிய பெரியோர்கள் மேடையில் அமர்ந்து இருக்கிறார்கள்.
மைக்கில் எனது பெயர் ஒலிக்கிறது. நண்பர்களின் 👏 கரவொலி ! நம்மை ஆண்ட வெள்ளைகார ஆண்டி உடுத்தியதை போல் கருப்பு நைட்டி அணிந்து இன்முகத்துடன் மேடையே நோக்கி!🕴🕴🕴🕴
அந்த கருப்பு சொல்லாமல் சொல்லுகிறது உன் வாழ்வு இருளில் தான் உள்ளது என்று !
சின்னதாய் கை குலுக்கல்! வேண்டா விருப்பாய் .......வீட்டின் சுவரில் பெருமைக்காக மாட்டுவதற்கு ஒர் புகைப்படம் !
நானும் பட்டதாரி தான் ! நானும் பட்டதாரி தானு உலகத்துக்கு இணையம் வழி(fb) சொல்ல ஒரு தருமி (selfie).
அப்லோடு (upload) செய்தவுடன் வந்தது லைக்ஸ் &📝காமென்ட்ஸ்..
அந்த பட்டத்திற்கான அதிகபடியான விலை அது மட்டுமே . அம்மா சீதனமாக கொண்டு வந்த அலமாரி பெட்டிக்குள் சிதம்பர ரகசியமாக வைத்து தூக்கி ஒதுக்கி வைக்கபட உள்ளது.
எப்போது அதுக்கு விடிவுகாலம் என்பது ..எனது விடிவு காலத்தை போல கணிக்க இயலாது .இது தான் நடக்கும் என்று தெரிந்தும் காத்திருக்கிறேன் ! அந்த நாளுக்காக ! தருணத்திற்காக !
அன்புடன் ...இல்லை ஏமாற்றங்களுடன்,
✍ -@யுவன்_முத்து
ஆ.நேர்மறையாக (positive)
Stay tuned😝😝😝கண்டிப்பா அடுத்த பதிவில்...