#முதல் முத்தம். அவளும் நானும் :: அந்த மழையில்
ஒரு நாள் மாலை 6 30 மணி .நல்லா வெளிச்சம் போய்டுச்சுனும் சொல்ல முடியாது ,இருட்டாயிடுச்சுனும் சொல்ல முடியாது...அது ஒரு நீண்ட நாள்களுக்கு பிறகான சந்திப்பு அவளுக்கும்,எனக்கும்.பல முறை திட்டமிட்டு ஏதோ ஏதோ காரணங்களால் நடைபெற முடியாமல் போன சந்திப்பு ! ஒரு வழியாக இந்த முறை சேத்துப்பட்டில் உள்ள பார்க்கில்! என்னிடம் கார் எல்லாம் இல்லை பார்க் செய்வதற்கு😝...நடந்து தான்.எப்பவும் போல என்னை காத்திருக்க வைத்து ,காட்சியளித்தால்...
பேசி கொண்டே நடந்தோம்...போன தூரம் தெரியவில்லை....20 நிமிடம் நடந்தே போய் இருப்போம்.ஒரு வழியாக கூட்டமாக இருந்த இடத்தில் அமர்ந்தோம்.அவளுக்கு அது தான் பாதுகாப்பு போல என்னிடம் இருந்து.எங்களின் நெருக்கத்தை பிரிக்கும் ஒரு எல்லை கோடாக மின்விளக்கின் பிம்பம் (அவளின் மனதில்,இந்த நிழல தாண்டி நானும் வர மாட்டேன்,நீயும் வர கூடாதுனு)..ஊர் கதை ,அவ கஷ்டபடுற கதை எல்லாம் சொல்லிட்டு இருக்கிறா!
திடீர் மாற்றம். காற்றின் வேகமும்,மண்ணின் மனமும் ...மேகம் சூழ்கிறது ...பேசுனது போதும்.எந்திச்சு கிளம்புங்கடானு சொல்ற மாதிரி .மழை வரும் போலனு அவ சொல்லிட்டு இருக்கும் போதே ஓர் தூறல் என் கண்ணத்தில்!
அய்யோ ?நனைஞ்சுட்டு போன எங்க போனனு அம்மா கேட்கும் . ஓப்பாரி வைக்கிறா! வா போகலாம்னு பறக்குறா !காலுல சக்கரத்த கட்டிக்கிட்டு ../. (நான் வானத்தை முறைத்து ...உனக்கு என்னடா தூரோகம் பண்ணேன் ! ஏன் இப்படி 😡) இரண்டு அடி எடுத்து வைப்பதற்குள் ,தன் முழு பலத்துடன் மழையும்,காற்றும்.மரத்திற்கு அடியில் நிற்கவும் பயம் !பேயாட்டம் ஆடுகிறது. எப்படியாச்சும் வெளியில போய்டலாம்னு நடக்க ஆரம்பிக்கிறோம் ! நான்கு திசைகளிலிருந்தும் பலத்த சத்ததில்இடி...ஏதோ ஒன்று பற்றி கொள்கிறது...?என்னை ! ஆம் ! அது அவள் விரல்கள் ...அன்றைய சந்திப்பில் விரும்பதகாமல் விலகிய கைகள் என்னை பற்றி கொள்கிறது! அன்று நான் இருக்கி பிடித்தேன் இவள் போய் விட கூடாது என்று .அது பிடிக்கவில்லை அவளுக்கு !ஆனால்,இன்று அவள் இருக்கமாக என்னை ...அந்த இடியின் பயம் காரணமாகவா ? இல்லை வேறு ஏதாவது ? வழக்கம் போல் இவள் அன்பை புரிந்துகொள்ள முடியவில்லை !
(இவன் இப்போது வானத்தை பார்த்து ! கடவுள்டா நீ 😘)
வெளிபகுதிக்கு வரும்வரை நான் அவளை மட்டுமே பார்த்துகொண்டு இருந்தேன்! என்னை இழுத்து கொண்டு போகிறாள்! ஆடு வெட்டுபவளே போல ஒரு கையில் நான் ,இன்னொரு கையில் அவள் பை (handbag) அவள் உடல் முழுவதும் நனைந்து ஆடை இருகிகொள்கிறது உடலுடன் !அவளை நிறுத்துகிறேன் ! அவள் என்னடானு ! ஒர் பார்வை .....இருக்கி கட்டி அனைத்து முத்தம் தருகிறேன் அந்த இடியின் சத்ததை விட பலமாக !அழுத்தமாக
இவ்வளவு இதா பேசுறீயே ! நீ முத்தம் கூடுத்த பிறகு அவ என்ன பண்ணனு கேட்குறீங்களா??(டேய் முண்டம் ,இதுக்கு தான் நிறுத்தினுயா ? மழை நிக்கட்டும் .உனக்கு செருப்பு இருக்குனா ! அவ எப்பவுமே அப்படிதாங்க !)
அன்புடன் இல்லை ஆசைகளுடன்
-✍@யுவன்_முத்து
Hotel & Casino, Dubai, UAE - Air Jordan23
ReplyDeleteGuests can show to get air jordan 18 retro toro mens sneakers try the outdoor pool. If you're looking how to get air jordan 18 stockx for a pool in 스포츠토토 판매점 위치 샤오미 the centre, the Hotel & Casino, Dubai, UAE has air jordan 18 retro men blue from us a wide range of outdoor swimming pools.Hotel class: Adults onlyRooms: 2616 how to find air jordan 18 retro yellow suede sq ft