தரமணி ராமின் 3 வது படம் .3 வருட காத்திருப்பும் கூட.....இந்த படம் என்னை திருப்தி படுத்தியது ! இல்லை என்பதை விட அது என் முன் எடுத்து வைத்த கேள்விகள் ஏராளம் !
நாளை உங்கள் பிள்ளை "what is pitch " என்று கேட்டால் உங்கள் பதில் ???
ஒரு வேளை நான் பெண்ணாக இருந்து நான் வேலை செய்யும் இடத்து முதலாளி
" we are stay in same room ,same bed at in our business trip ! What u say baby " என்றால் என் பதில் என்னவாக இருக்கும் ?
" we are stay in same room ,same bed at in our business trip ! What u say baby " என்றால் என் பதில் என்னவாக இருக்கும் ?
உங்கள் காதலனோ ? காதலியோவிடம் ? உங்கள் முகப்புத்தக கடவுச்சொல்லை தருவீர்களா ?
உங்கள் மனைவி உனக்கு உண்மையாக தான் இருக்கிறாள் ! என்று உறுதி சொல்ல வழி உண்டா ?
போனிற்கு பணம் ஏற்ற இளசு பசங்க நடத்தும் கடைக்கு செல்லலாமா ?
ஊர் பேர் அறியாதவனுக்கு ,பஸ் நிலையம் தான் இருப்பிடம் என்றிருந்த மனநிலை இப்போது ரயில் நிலைய பக்கத்திலும் செல்கிறது