Saturday, 21 October 2017

கர்வம் அழிந்ததடி !!

அந்தி மாலைப்பொழுது...
இளஞ்சூட்டில் ஆவி பறக்கிறது !
என் வலது கையின் விரல்களுக்கிடையே...
அகப்பட்ட தேநீர் கோப்பையிலிருந்து !!

கருநிற புட்களை போல காட்சியளிக்கும் ..
தாடியை தடவிகொண்டு !
மூக்கு கண்ணாடியை சரி செய்து ..
ஜன்னல்லை திறந்து வெளி நீட்டுகிறேன் ...
என் இடது கையை !!

யாரோ ? தண்ணீர் தெளிப்பது போல் ..
மழைச்சாரல் என் கைகளில் விழுகிறது !
ஒரு கையில் உஷ்ணம் ...
மறு கையில் இதமாக ஒரு சுகம் !!
இதை விட சிறந்த தருணம் இருக்குமா ??

கர்வம் கொள்கிறேன் !!
இந்த மாலைப் பொழுதின் மயக்கத்திலே....
.
.
.
.
.
மறுநாளே ..நண்பகல் நேரம்...
கொளுத்தும் வெயிலுக்காக !
இளநீர் பருகுகிறேன் ...
பேருந்து நிழற்குடையின் நிழலில் நின்று !!

எப்போதும் போல்...
பேருந்து நிறுத்தத்தை தாண்டி..
நிற்கிறது ஓர் பேருந்து !
ஒரே ஒரு கிளவி மட்டும்..
சாக்கு பையுடன் இறங்குகிறாள் !!
அந்த நிறுத்தத்தில்..

ஏதோ ? ஒன்று ! அந்த ,
பேருந்தின் ஜன்னல் ஒர கம்பிகளுக்கிடையே பிரகாசிக்கின்றது !!
ஆம் ..ஓர் பதுமை அங்கே ...
இவளது பொலிவில் மங்கியது!
சூரியனின் பொலிவும் ...

பருகிக் கொண்டிருந்த இளநீர் !
தீர்ந்தப்பின்னும் ...இன்னும்....
உறிஞ்சுக் கொண்டிருக்கிறேன் மெய்மறந்து.
அந்த மட்டையே !!

உடலின் உஷ்ணம் அதிகரிக்கிறது !
இளநீர் உள்ளே போன பிறகும் ...
உஷ்ணத்திற்கு காரணம் ..அவளை ..
கண்ட காம மோகத்தினால் அல்ல !
ஓர் பிரபஞ்சத்தை கண்ணருகில்...
பார்த்ததால் !!

நேற்று தான் கர்வம் கொண்டேன் ...
அந்த...மாலைப் பொழுதின் மயக்கத்திலே !
இன்று உன்னால்...
அந்த கர்வம் அழிந்ததடி...
உன்னாலே ...
கர்வம் அழிந்ததடி !!!!
.
.
.
.
.

நடத்துனரின் விசில் சத்தம் !
அடுத்த நிறுத்தத்தை நோக்கி நகர்கிறது..
பேருந்து மெல்ல !!
ஆம் ! இந்த பேருந்து எங்கே போகிறது என்று தெரியவில்லை ...??
ஆனால் ! என் எஞ்சிய நாட்கள் இவளுடன்தான் போக வேண்டும் என ஏறிவிட்டேன் இந்த பேருந்தில் ....

அந்த பிரபஞ்சத்தை தரிசனம் செய்ய..
கட்டணம் 10 ரூபாய் !

கூட்டம் இல்லாத அந்த பேருந்தும்...
என் கற்பனைகளுக்கு !
விழாக்கோலம் போல் காட்சியளிக்கிறது ...
என் திருமண விழாவாக ...
அய்யோடா..என்ன அழகு அவ !!

அவளது தலை முடியை ..
ஆக்கிரமித்து இருக்கும் அந்த..
குண்டு மல்லிகை பூவிலும் !!
அவளின் அழகை கவுரவிக்கும் பொருட்டு.
அவளை படர்திருக்கும் அந்த ...
பட்டுசரிகையிலும் !!
நெற்றியல் இட்டிருக்கும் குங்குமச்சிமிலிலும் ..

ஒரு நிமிஷம் !! இந்த தோற்றத்தை....
இதற்கு முன் எங்கோ கண்டுள்ளேன் ?
அட....என் அழகு தங்கச்சி ....

இவ்வளவு காலம் கர்வம் கொண்டிருந்தேன்! தங்கச்சியின் அழகில் !!
அத்தனையும் ஒரிரு நொடியில்...
தகடுபொடியாக்கி விட்டாய் ...
உண்மையில் கர்வம் அழிந்ததடி !!
உன்னாலே ...
கர்வம் அழிந்ததடி !!.....
.
.
.
.
.
ஏதோ ? ஓர் பேருந்து நிறுத்தம் வருகிறது ...
விலகி இருந்த தலைமுடியை கோரி...
காதருகில் சொருகிக் கொண்டு !!
இறங்கிவிட்டாள் .!
கிறங்கிவிட்டேன் ..நானும் அந்த நொடியில் !! என்ன பொண்ணுடா அவ ...

முன்னோக்கி அவள் நடக்கிறாள் ...
அவள் நிழலிற்கு நிழலாக...
எனதும் நிழலும் குடை பிடித்து வருகிறது .!

சார் பதிவாளர் (register Office) அலுவலகத்திற்குள் நுழைகிறாள் ...
நுழைந்தது தான் தாமதம் ..!
அவளை மொய்க்கிறது
தோழிகளின் கூட்டம் .....
இவளின் முகத்திலும்
அப்படியொரு  புன்னகை !!!

நின்றுவிட்டேன் ...அந்த ...
அழகியே தூரத்திலிருந்து ரசிக்கலாம் என..!
அங்கு இருந்த வேப்ப மரத்தடியில் ...

அவள் அலுவலக அறைக்குள் போய் ...
26 நிமிடம் ஆகிறது..என் வயதைப் போல்..
நடக்கும்போது...காற்றில்..
அசைந்த அவளது கைகள் !!!
இப்போது...இப்போது.....??

இறுக்கமாக ஒருவனின் கையை பற்றிக்கொண்டு வருகிறது ....
அந்த அறையே விட்டு !!
நான் முன்பு கண்ட ..அத்தனை அழகும் !!
குறையாமலும்,கலையாமலும் இருக்கிறது...

என்ன ?? கூடுதலாக ...கழுத்தில்...
மாலையும்,தாலியும் காட்சியளிக்கிறது !!
ஒ.ஒ. கல்யாணம் அவளுக்குதான் போல..

அவளது கண்ணீல் கண்ணீர்...
இது பெயர் ஆனந்த கண்ணீர்ல !!!
எனது உதட்டோரத்தில் மெல்லிய புன்னகை !!!
இதுக்கு பெயர் என்ன ????

ஆஆஆஆஆஆஆஆஆஆ !

ம்ம்ம்ம்ம்ம்ம் !!! சரி ..

முதல் காதலும் முடிந்ததடி ....
என் கனவுகளும் சிதைந்ததடி....
உன்னால்
நான் கொண்ட அத்தனை....

கர்வமும் அழிந்ததடி .!!
பெண்ணே ...உன்னாலே....
என் கர்வம் அழிந்ததடி !!!

No comments:

Post a Comment