**சவரக்கத்தி**
இந்த கத்தி பார்ப்பவர்களை குத்துமா என்று தெரியவில்லை .. ஆனா , கண்டிப்பா ஏதோ ஒரு வகையில் உரசி பார்க்கும் ..
பிசாசு (மிஷ்கின் ) (மங்கா)
தங்கமீன்கள் (ராம் ) (பிச்சை)
தூண்டில் (பூர்ணா) (சுபத்ரா)
இந்த பிசாசுக்கு தங்கமீன் வேணும் .. அதை எப்படியாவது அடையனும்னு போராடுது.. தங்கமீனை பிடிக்கிறதுக்கு ஒரே வழி.. தூண்டில் இந்த பிசாசு கையில் இருந்தால் மட்டுமே சாத்தியம் ..அதே தான் அதுவும் பண்ணுகிறது ..
தங்கமீன் ரொம்பவே சுவாரஸ்யமானது .. தன் குழந்தைகளுக்கு முன்னால் ஹீரோவாகவும் , பேரம் பேசும் மனிதனாகவும் , உண்மையிலேயே தூண்டிலில் அகப்பட்ட மீன் போலத் தான் ,அவன் காது கேளாத மனைவியிடம் சிக்கித் தவிக்கிறான் .. காட்சிக்கு காட்சி சிரிப்பு , கோபம் ,அழுகை ,தன் இருப்பை காட்டுதல் என பல்வேறு பரிமாணங்களில் தோன்றுகிறான் ..
பிசாசு .. ஒரு ஜிப்பா , மிலிட்டரி கட்டிங் ,கழுத்துல ஜெயின் ,கூர்மையான பார்வை ... அந்த பிசாசின் குணம் எப்ப பார்த்தாலும் கோப படும் .. கோபம் மட்டுமே படும் ...நல்லா தொண்டை தண்ணீர் வற்ற கத்த தெரியும் ...
தூண்டிலுக்கு இதை விட நல்ல கதாபாத்திரம் அமையுமா ? என்பது கேள்விக்குறியே ..
புருஷனுக்கு ஏற்ற மனைவி போல் தான் அவளின் பகுமானமும் ,வாயும் ..
கவனிக்கத் தோன்றிய இடங்கள் ::
** குப்பைத் தொட்டியில் தங்கமீன் ஒளிந்திருக்கும் போது .. குப்பை அள்ளுபவனின் செயல் .. அவனுக்கு தேவை குப்பை மட்டும் தானே .. அவனது செயலை பார்த்தால் எவனுக்கோ அது தங்கும் வீடு போல
** நீங்க எங்க இருக்கீங்கனு சொல்லுங்க நானே வருகிறேன் என தங்கமீன் சொல்லும் போது ..
"இல்ல ..நீ ஓடு ..நான் உன்ன துரத்தி பிடிக்கிறேன் " என பிசாசு தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு ..சொல்லுவது எல்லாம் தன் இருப்பை நிலை நாட்டவும் !!
தோல்வியை ஒப்புக் கொள்ளமுடியாமல் தவிப்பதும் தான்
** என்னத்த ராக்கெட் செஞ்சு மேல பறக்க விட்டாலும் ... கையால தான் கழுவனும் .. என கவனிக்க வைக்கிறார் டீ கடையில் வேலை செய்பவர்
** இப்படியொரு காதலை காட்டியதற்கே ஆயிரம் முத்தங்கள் தரலாம் அந்த பிசாசுக்கு (கதை ,திரைக்கதை ) !! தனக்கான மாப்பிள்ளை ஒரு ஊனம் என்று தெரிய வரும்போது .. அவளிடம் நீடிக்கும் அந்த மவுனங்களே உடைத்தெறிந்தது ..அவள் சாதிகளின் ஆணவத் தன்மையே .. ஊனமற்றவனின் கால்களை தாங்குவது எல்லாம் ... அவளின் பாவங்களை கழுவும் செயல்
** எல்லாம் இழந்து போய் இருப்பவனுக்கு உத்வேகம் தரும் ஊனமுற்ற டீ கடைக்காரரின் சைகை மொழிகள்
** கரும்பு ஜூஸ் அக்கா , சைக்கிள் கடை ஓனர்
** பிசாசின் நிலை கண்டு துடிக்கும் அவனின் அப்பா
** தத்துவம் பேசும் பைத்தியம் .. ஆங்கிலத்தில் பேசினால் அவன் மகான் ..
இதை விட முக்கியமாய் கவனிக்க வைத்த இடங்கள் ..
** நிறைவு பகுதியில் ... நம்ம அப்பா / நமக்கு ஹீரோ தானா !!
தங்கமீன் அடி வாங்கும் காட்சி .. யப்பா .. சண்டை போடுப்பா !! என கண்ணீர் மல்க கெஞ்சும் பெண் பிள்ளையிடம் ..
"அப்பாக்கு ..சண்டை தெரியாதுமா " என கண்ணீர் சிந்தும் அதே தங்கமீன் தான் !!
ஆண் பிள்ளை ஓடி வந்து பார்க்கிறது .. தன் தந்தை அடி வாங்குவதை .. அவனிடம் வார்த்தைகள் கூட இல்லை ... ஒரு பார்வை தான் .. இதை கவனித்த தங்கமீன் வீரம் கொண்டு எழுவது எல்லாம் ?
பெண் பிள்ளை சொல்லும் போது .. எங்கே போனது அந்த வீரம் ..
** கட்டி உருளும் பிசாசும் , தங்கமீனும் .. தண்ணீர் டப்பாவில் இவர்கள் மோதும் போது ..அங்கு அவளின் தண்ணீர் குடத்திலிருந்து வெளிவருகிறது சிசு .. கணத்த மெளணங்கள் ஆக்கிரமிக்கிறது சில நொடிகள்..
#கத்தி எதுக்கு தான் .. தொப்புள் கொடி வெட்டத்தான் ...
** அந்த கத்தியை கழுவ திறந்த தண்ணீர் குழாயை ஏன் அவள் அடைக்காமல் சென்றால் ?? அந்த பிசாசுக்கு தண்ணீர் தெளித்து உயிர் கொடுக்கவா ..
வந்து விட்டதே .. பிசாசுக்கும் உயிர் , மனிதாபிமானம் எல்லாம் ..
No comments:
Post a Comment