Sunday, 4 February 2018

நினைவலைகள்

இது கதை அல்ல !
கவிதை அல்ல !!
கற்பனைகள் அல்ல !!!

என் #மெய்யான_மெய்யே

தாயின் மடியில் தவம் கிடந்த நாட்கள் துளியும் ஞாபகமில்லை ..
தகப்பன் தன்னை தோளில் சுமந்த காலங்கள் இன்னும் வியப்பின் ஆச்சரிய கேள்விக்குறி தான் ..

அந்த மனுசனுக்கும் நம்ம மேல பாசம் இருக்குது ..அதை காட்டுகிற நிலைமையில் தான் இல்லை போல் ..

ஆனால் !!

இந்த நட்புகளுடன் இருந்த மணித் துளிகள் மட்டும் ...
நினைவலைகளாக ஆர்ப்பரித்துக் கொண்டே இருக்கு ...
நீச்சல் தெரியாத காரணமோ ? என்னமோ ?
அதில் இருந்து வெளிவர முடியாமல்
தத்தளித்துக் கொண்டே இருக்கிறேன் ..

எத்தனை எத்தனை நினைவுகள் !!
அதில்,ஒன்றாவது இனி நடக்காதா ?
என தவிக்கின்ற என் இதயங்கள் !!

****

என் எச்சியை ...
தாயை தவிர எவரும் ...
இவ்வளவு ரசித்திருக்க முடியாது !!
என்றிருந்தவனுக்கு செருப்படி கொடுத்தது
அந்த நட்புகளின் எச்சிகள் ...

அப்பன் வைத்த பெயரை மாற்றி ..
பட்டப் பெயர் வைத்தோம் !!
நமக்கு நாமே
கூப்பிட்டு பார்த்தால் கூட ...
அந்த பெயர் தான் நம்மை வசீகரிக்கிறது ..

பெரும்பாலும் ..
அந்தரங்க வார்த்தைகள் தான் எங்களை சூழ்ந்திருக்கும் !!
அது ஆகாயத்தையே சீண்டுமளவிற்கு
அனல் பறக்கும் ..

*****

இடையில் எப்போதாவது ..
முட்டிக் கொள்வோம் ..
மோதிக் கொள்வோம் ..
சட்டையே பிடித்துக் கொள்வோம் ..

ஆனால், கொஞ்ச நாளிலேயே !!
சின்னம்மா பாணியில் ..

ஒருவரையொருவர் ;
பார்த்துக் கொண்டும் ..
பேசிக் கொண்டும் ..
பல்லை இளித்துக் கொண்டும் ..
கை கோர்ப்போம் !!

என் உடன்பிறப்புக்கே ..
அனுமதியில்லை நான் பயன்படுத்துவதை
அவன் உபயோகிக்க !!

இவனுக்கு மட்டும் எப்படி கொடுத்தேன்
இவ்வளவு சுதந்திரத்தை ..
#சர்வமும்_தாராளமயம்
ஆனால், நட்புகளுக்குள் சொல்லப்படாமல்
ஒர் உடன்படிக்கை இருந்தது ..
வேறு என்னவாக இருக்கப் போகிறது ..
அந்த உள்ளாடையின் பயன்பாட்டை தவிர

****

நட்புகளின் அழுகையை வேடிக்கை பார்த்தது எல்லாம் ..
தந்தைகளின் மரணத்தில் தான் ...
அந்த வலிகளிலிருந்து
முதலில் நான் மீள வேண்டுமே ..
அப்புறம் தானே நண்பனை அழாதே என ஆறுதல் கூற முடியும் ..

வகுப்பறையில் அவர் !! (ஆசான் )
(எல்லாரையும் குறிப்பிடவில்லை )

பாடம் நடத்துவது போல் படம் காட்டுவார் ..
இங்கே கடைசி பலகையிலும்
படம் காட்டப்படும் .. இலவசம் தான் !!
ஆங்கில நாயகியின் ஆடையில்லா ஆட்டங்கள் ...
அவளின் முனகல் ஒலி கூட
Mute செய்யப்பட்டிருக்கும் ... என்பது வேற விஷயம் !!

நேரங்காலம் அறியாது
சாப்பிடுவோம் ....
கைவைக்காத டிபன் பாக்‌ஸ் இல்லை ..

வகுப்பு நேரத்தில் ..
கல்லமிட்டாயை கூட கடுகு போல தான் கடிப்போம் ..
சப்பாத்தியை கூட இட்லி போலத்தான் முழுங்குவோம் ..

(வெயிட் ..சிரிப்பு வருது ..அவனும் சிரித்திருப்பான் ..)

பசியில்லை என்றாலும் ..ருசிக்காகவே தின்ற நாட்கள் அது ...
இப்போது எல்லாம் !!
பசியும் இல்லை .. திங்கிற தீவணங்களில் ருசியும் இல்லை ..

******

தலையனை வேண்டாம் ..
தாய்மடி வேண்டாம் ...
அவன் உடல் மேனியும் ..
யானை வயிறு தொந்தியும் போதும் ..
துயில் கொள்ள ..

தினம் ஒரு நட்பு கிடைக்கத்தான் செய்கிறது ..
ஆனால், எதுவும் நான் தொலைத்த நட்புகளின் அருகில் கூட வராமல் தொலைவிலே நிற்கிறது ..

****

எனக்கு காதலி இல்லை ..
இப்படி எழுதிப் புலம்பிக் கொண்டே இருப்பதால் வரப்போகிற மனைவியும் நீடித்திருக்க வாய்ப்பில்லை ..
அந்த நட்பின் நினைவுகள் போதும் ..

எவ்வளவு சுகமான நினைவுகளாக இருப்பினும் ..
நினைத்துப் பார்த்தால் ..
மனதில் கனத்தையும் ..
விழி ஓரத்தில் கண்ணீரையும் தான் தருகிறது !!

எத்தனை எத்தனை நினைவுகள் !!
அதில்,ஒன்றாவது இனி நடக்காதா ?
என தவிக்கின்ற என் இதயங்கள் !!

தொடரும் என் நினைவலைகள் ..

Thursday, 25 January 2018

வெற்றியா ? தோல்வியா ?

எதில் எல்லாம் நீ தோல்வி அடைவேன் என எண்ணுகிறாயோ ? அதை நோக்கி நீ ஓடு !!

ஓடுகிறாயா ? பற்றாது வேகம் !!
இன்னும் வேகமாக ஓடு !!

கொஞ்சம் திரும்பி பார் .. நீ தாண்டி வந்த தோல்விகள் எல்லாம்  வெற்றியை தாங்கிக் கொண்டு வலம் வருகின்றன .. அந்த வெற்றி உன்னை நெருங்கிவிடாமல் பார்த்துக் கொள் !! ஏனென்றால் ,அதை தக்க வைக்க முடியாது ... 

அப்போது வெற்றியை எப்போது தான் அணுபவிப்பது ? என்கிறாயா ?

ஓடி ஓடி ...களைப்பாறும் இடைவெளியில் அந்த வெற்றியை ருசித்துக் கொள் .. மறந்துவிடாதே .. திரும்பவும் ஓட வேண்டும் என்பதே .

எப்போதும் ,வெற்றியும் ...புகழின் கொம்பானியிலும் தான் அமர்வேன் என்றால் இரு ... வாழ்க்கையில் வென்று விட்டேன் ,என  மார்த்தட்டிக் கொள் ..

ஆனால்,நினைவில் கொள் ..
உன்னுயிர் மண்ணடி சேரும் போது அந்த வாழ்வு தான் உன்னை வென்றிருக்கிறது என உனக்கு புரியும் ..

#RUN_TO_FAILS

Sunday, 31 December 2017

இந்த புத்தாண்டு 2k18

உலகமே இன்றைய நாளை தான் புத்தாண்டாக கொண்டாடுகிறது..அப்புறம் ஏன் ஆங்கில புத்தாண்டு என பெயர் சூட்டிக் கொண்டு ..உலக புத்தாண்டாகவே வரவேற்போம் ..

ஏய் நூற்றாண்டே ??
இன்னும் எத்தனை ஆண்டை
கடக்கப் போகிறாய்..
ஓர் நூற்றாண்டு கூட
வாழ முடியாத மனித இனம் நான் ..!

மேலும் ! மேலும் !
வஞ்சித்து விடாதே .
இல்லையேல்..
வெறுத்து விடுவேன் கடந்த ஆண்டுகளை போல் !!

சென்ற ஆண்டின் ..
அதான் ! நேற்றைய நாளின் (டிசம் -31)
இருள் சூடிய வேளையில்
முகம் காட்டிய சந்திரனிடம்..
தூது உரையுங்கள்..

நீ அடுத்த ஆண்டில்
பிரகாசித்துக் கொண்டிருக்கிறாய் என..

என் வீட்டு முற்றத்தில் உள்ள
குட்டி குட்டி தவளைகளுக்கும் !
காய்க்காத தென்னை மரத்திற்கும் !!
எப்போதும் அந்த..
பல்பு வெளிச்சத்திலும் !
ஐன்னல் ஒரத்திற்கும் இடையே !!
தஞ்சம் புகுந்த பல்லிகளுக்கும் சொல்லியாச்சு ...
#happy_new_year என

அய்யோ !!..
அந்த மொட்டை மாடிக்கும்..
அங்கு ,நான் பார்க்கும் ..
வானத்திற்கும்..
சொல்ல மறந்திட்டேனே ..!!
பரவாயில்லை /
கோபித்துக் கொள்ள மாட்டாள் ..
அவளைப் போல ****

எல்லா நாளும்..
ஒரு நாளே ..என
தூங்குபவர்களுக்கும் புதிய ஆண்டின்
செய்தி சொல்ல..
விண்ணை பிளக்கிறது வெடிச்சத்தம் ..
கூடவே :: சீறி பாய்கிறது
150/180/220 சிசி ,புல்லட் ரக
மோட்டார்கள் ..அதுவும்
அந்த கரகர ஹார்ன் ஒலியுடன்..

அடேங்கப்பா ..
அந்த பேக்கரி கடைக்காரனிடம்
எவ்வளவு கூட்டம் ..!!
இவ்வளவு நாள்
காட்சிப் பொருளாய் ..அந்த
கண்ணாடி குடுவையை
அலங்கரித்த கேக்கை விற்றுத் தீர்த்துவிட்டான் ,ஒட்டு மொத்தமாக...
பரவாயில்லை..வித்தை தெரிந்தவன் தான் !!

ஸ்ப்பா ..ஸ்ப்பா...
குயி..குயி.குயி..குயி..
போலிஸ் ஜீப்பின் சத்தம் ..
சட்டம் தன் கடமையை செய்யும் போல்..!!

இந்தப் பக்கம் ..
ஏதோ ..ஆம்புலன்ஸ் சத்தம் ..
தன் உயிரை மாய்த்துக் கொள்ள
தானே காரணமாக இருப்பவன்
இந்த மனித இனம் மட்டும் தான்..!!

**

அந்த தார் ரோட்டு சாலைக்கும் ,
தெரு விளக்குகளுக்கும் ...
புதிய ஆண்டின் வருகையை
தெரியபடுத்த வந்துவிட்டாள் ..
எதிர் வீட்டு தேவதை !!

தண்ணீர் தெளித்து ,
கோலம் இட்டு ..
கலர் தூவி..
தன் கைபட happy new year 2018
என்றும் எழுதியாச்சு
இருந்தும் முற்று பெறவில்லை !
மன திருப்தியும் இல்லை !!

இவள் கோலம் போடும் வரை ..
இந்த தேவதையின் தேவதையாம்..
தகப்பனின் மார்ப்பில் சாய்ந்து
வேடிக்கை பார்த்தவளே..
கீழ் இறக்கி !
கோலப் பொடி அள்ளி
ஆண்டின் தொடக்கத்திலேயே..
அதற்கு முற்றுப்புள்ளி ஒன்றும் வைத்தாயிற்று ..
அந்த பிஞ்சு விரல்களால் !!

ஏய் நூற்றாண்டே  !!
உன் வேகத்திற்கு
எங்களால் ஈடு கொடுக்க முடியாது ..
அதனால் , பொறுத்துச் செல்..
சபித்து விடாதே //
இல்லையேல் !!
வெறுத்து விடுவேன் வழக்கம் போல்
இந்த ஆண்டையும் ..

Thursday, 14 December 2017

தொலைந்து போன நட்புகள் !!

கலகலவென இருந்த அறைகள்
இப்போது கல்லறை போல் ...
ஓர் மாயான அமைதி !!

ஆட்கள் இல்லாத வீட்டில் ..
எனக்கு மட்டும் என்ன வேலை ?
என, அந்த கொசுவிற்கு கூட கிராக்கி வந்துவிட்டது ...

***

ஸ்டார் டிவி, சூரிய டிவி ...
என..அலறும் சத்தம்
கேட்ட வீடு ...
இப்போது ! எல்லாம்
மெதுவாய் சுத்தும் அந்த
மின்விசிறியின்
கரகர ஒலி மட்டும் தான் ...

இன்னும் கொஞ்ச நாள் போனால் ..
அந்த கடிகாரத்தின்
நொடி முள் சத்தம் கூட ,இந்த
வீட்டை முழுவதுமாக
ஆக்கிரமித்து விடும் போல் ...

ஒரு நிமிஷம் ..
யாரோ ?
கூப்பிடுவது போல் இருக்கிறது ..

அட ச்சே !!
வேறு யாரும் இல்ல ..
என் பெயரை நானே மனதுக்குள் உச்சரித்து இருக்கிறேன் ..
இது தான் மனப் பிரம்மையோ ?

****

அழுக்குத்  துணிகளால்..
அலங்கரிக்கப்பட்ட
ஐன்னல் , வாசல் கதவு ,
அப்புறம் அந்த கொடி ..
எதையும் காணும் இப்போ !!

கறை பொதிந்திருந்த
கேஸ் ஸ்டவ் உள்ள அடுப்பங்கறை ..
டப்பா டப்பா வா //
அடுக்கி வைத்திருந்த அலமாரிகள் ..
குக்கரின் விசில் சத்தம் !
என்றாவது ஒரு நாள்
கமகமக்கும் நண்பனின் சாம்பார் ..
இதையும் காணும் இப்போ !!

முந்தி எல்லாம் ..
நான் மட்டும் அமைதியாக.. தனியாக
இருந்தேன் !

இப்போது ..
என்னைப் பின்பற்றி ..
எனக்கு துணையாக இன்னும்
சில உயிரில்லாப் பொருட்கள் ..

*****

பைத்தியகாரனாக இருக்கும் போல..
அந்த சிலந்தி !!
எந்தன் வீட்டை நான்
இன்னும் காலி செய்யவில்லை ..

அதற்குள் ,
அவன் வீடு கட்ட ஆரம்பித்துவிட்டான்
மூலைக்கு மூலை ..

இங்கு !
சில பிரிவுகள்
பொதுவானது தான் ..
ஆனால்,அவையெல்லாம் !!
நியாயமானது என்று சொல்ல முடியாது ..

தினமும் ..
பார்த்துக் கொண்டும்..
கைக் கோர்த்து கொண்டும்..
திரிந்த உறவுகள் !!

இனி !!
என்றாவது பார்க்கலாம் என...
கை குலுக்கி விட்டு வெகுதூரம் செல்கிறது..

*****

ஒரு நாள்..
நானும் இந்த வீட்டை விட்டு
போகத் தான் போகிறேன் ..
ஆனால் !
என் வாழ்வில் சில நாட்கள்
இங்குதான் என..
என் முதுமை இந்த நினைவுகளை
அசைபோட தயாராக இருக்கிறது !!

இங்கு ..
என்னை சுற்றி எல்லாமே இருக்கின்றது..
ஆனால் !
எனக்காக தான் என்று எதுவுமில்லை ..
இது தான் இன்னும் இன்னும்
நிறைய யோசிக்க வைக்கின்றது !!

                           
                           ********

Saturday, 2 December 2017

** MY மனசு WHAT SAYING **

** மனக்குமுறல் **



பொதுத் தேர்வில் அதிக கட் ஆப் மதிப்பெண் எடுத்தும்,அரசாங்கத்தின் சாதி  பிரிவுகளுக்கான இட ஒதுக்கீட்டின் படி நல்ல காலேஜில்  
(அரசு மற்றும் சில புகழ் ஓங்கிய தனியார் கல்லூரிகளில் )
இன்ஜீனியரிங்க் படித்தாலும் சரி....
மீதம் உள்ள கல்லூரிகளில் இன்ஜினியரிங் படித்த மாணவர்களாக இருப்பினும் சரி ...
இவர்களை நான் தரம் பிரித்து..
***
உங்களுக்கு வேலை கிடைப்பதே அரிது.. இங்க ..contract என உருவாகும் வரை என்னைப் போன்ற 85%  இன்ஜினியரிங் மாணவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் நல்ல வேலை கிடைத்தது ..அது என்ன என்னைப் போன்றவா ? முழுசா படிங்க அப்ப புரியும் ...
Conract guyz உடல் நோகாமல் சம்பாதிக்கும் வித்தையே இவர்கள் எப்போது கண்டறிந்தார்களோ ! அப்ப ஆரம்பித்தது இந்த பிரச்சனை ! இன்ஜூனியரிங்க் படிச்சா வேலை இல்லையென்று ..
நீ எந்த கல்லூரியில் படித்தாலும் சரி..உனக்கான ஊதியம் (most of all )
₹ 8000 .. இதுல எல்லா நாளும் வேலைக்கு வந்தால் ₹500 சிறப்பு ஊக்கத் தொகை ..
(அட த்தூ..  ****   sorry .வாய்ல கொசு போய்டுச்சு )..
கொசு செத்துடுச்சு..சரி..நம்ம கதைக்கு வருவோம்..அந்த ₹ 8000 வாங்குறதுக்கு நீங்க எதையெல்லாம் அடகு வைக்கனும்னு சொல்ல விரும்பவில்லை !!
இல்ல..நான் இன்ஜினியர் எனக்கு ஐந்து இலக்க சம்பளம் (likely 10k to 15k ) வேண்டும் என்றால் அதற்கும் வழி வைத்திருக்கிறார்கள் இந்த contract guyz. என்ன 12 மணி நேர வேலை ...இதில் வேலை மட்டுமே 12 மணிநேரம் ..நீங்க வேலைக்கு கிளம்புறது,சாப்பிடுறது,திரும்ப வீட்டுக்கு வர ..எப்படி பார்த்தாலும் ஒருநாளில் 15 மணி நேரத்தை இவர்களுக்கே செலவிட நேரிடும்..
இது என்னடா வாழ்க்கைனு சொல்லி முடிக்கிறதுக்குள்ளவே அடுத்த நாள் வந்துடும் ..இதில் மற்றொரு சிறப்பு
உங்களை அந்த கம்பெனியின் நிரந்தர ஊழியர்களிடமிருந்து வேறுபடுத்தி காட்ட உங்களுக்கு டி-சார்ட் வழங்கப்படும் ..( அந்த மாதிரி கலர் சட்டை போட எல்லாம் தகுதி வேண்டும் டா )
***
இன்னொரு குரூப் இருக்கு ! பொறங்கையை நக்கிற மாதிரி.. (கொஞ்சம் சொல்ற விதம் ugly ஆக தான் இருக்கும்..but,இது என் மனக்குமுறல் தானே ..அதுக்கு தெரியாது இது எல்லாம் )
உள்ளங்கையே நக்கிறவங்க அந்த contract ல் வேலை செய்பவர்கள் ..உண்மையிலேயே நக்கிற அளவுக்கு எதுவும் இருக்காது அவர்களிடத்தில்...அது வேற விஷயம் !
இந்த பொறங்கைனு சொன்னது நம்ம (reference guys ) தான்...நம்ம கூட தான் குப்பை கொட்டிருப்பான் ..ஆனா, ஏதோ சொல்ற அளவுக்கு நல்ல வேலைல இருப்பான் ..பொறாமை எல்லாம் இல்லை ..ஆனா, கொஞ்சம் வயிறு எரிய தான் செய்யுது..
உடனே ..இந்த கூட்டம் பொங்கி எழும் ... ஏன் ? உனக்கு reference இருந்தா போகமாட்டியா என்று...கண்டிப்பா பொறங்கையை நக்கிற அளவுக்கு எனக்கு மாமனோ,மச்சானோ இருந்தா ?? ஆனா, இல்லையே...
இந்த இரண்டு வகையிலும் இல்லாத ஒரு குரூப் இருக்கு ! இன்ஜினியரிங் படிச்சிட்டு அத்தனை அரசாங்க உத்தியோகத்துக்கும் தேர்வு எழுதுவான் ..இதில் சிறப்பு என்னவென்றால் ! அந்த தேர்விற்கு தகுதி +2 தான் ...இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் !! அதிலும் பாஸ் பண்ண மாட்டான் ..இதுல இன்னும் கொஞ்ச பேர் , மச்சான் உன் கம்பெனியில வேலை இருக்கா ? அங்க இருக்கானு ? கடைசி வரைக்கும் கேட்டுகிட்டே இருக்கும் ...அப்படியே ஒரு கம்பெனியில சேர்ந்தா  கூட இரண்டு ,மூனு மாசம் தான் ...
பசங்க தான் இப்படியென்றால் ! பெண் இன்ஜினியர்கள் பேங்க் தேர்வு ... ஷோ ரூம் வரவேற்பாளர்கள் (receptionist) ..இன்னும் கொஞ்சம் கல்யாணம் பண்ணிடும் ...இன்னும் கொஞ்சம் பேர் வீட்ல உட்கார்ந்து நல்லா சீரியல் பார்க்கும் ...இதுல இன்னும் கொஞ்சம் தான் அவளுடைய கனவை நிறைவேற்ற சீறிட்டு இந்த உலகில் தடம் பதிக்கும் !!
நான் இறுதியாக சொல்ல விரும்புவது எல்லாம் ...எங்களை கை நீட்டி நீ இன்ஜினியரிங் ஒழுங்க படிக்கலனு ...நீங்க சொல்லகூடாது ..அதை கேட்கும் தகுதி உங்களுக்கு இல்ல !! உன் கணக்கு படி தேர்வில் தேர்ச்சி பெற்றால் u r an engineer..
Yaaa! Of course i am an engineer ..with first class...
எங்களது உழைப்பை , உரிமையே,உணர்வை,கனவை,இன்னும் சொல்லப் போனால் எங்களது இளமையையும்  பறித்துக் கொள்கிறாய் ...
உழைப்புக்கேற்ற ஊதியம் தா என்று சொல்லவில்லை ! எங்கள் உழைப்பிற்கு கொஞ்சமாவது மரியாதை தா என்று தான் கேட்கிறோம் ...
All the above words are
"My மனசு what saying "
----- an Engineering------

Friday, 17 November 2017

மாய தாரகை ...

           *** மாய தாரகை ***

மாய தாரகையே ...
நீ !
யாருடைய மங்கையே ?

உந்தன் விழிக்காகவே ...
பிரம்மனின் உழிகள் !
நிறைய மெனக்கெட்டு உள்ளது போல் ?

ஏனடி நீயும் ...
இது என்ன நியாயம் ?
எந்தன் விழியில் ..
இப்போது ... உந்தன் விழி .!!

******



இருண்டு போன வானத்தில் ..
வெள்ளை நிலா ..கண்டேன் இதுவரை !
இது என்னடி மாயம் ..
நான் செய்த யோகம் !!
வெள்ளை நிற படலத்தில் ..
கருப்பு நிலா ஒன்று !
அதுவும் ..
அங்கும் இங்கும் என சுழன்றுக்கொண்டு .!!
 
****
இரண்டு சிறைகளை (2 eyes) மட்டும்..
வைத்துக்கொண்டு !
இன்னும் எத்தனை பேரை அடைக்க ..
காத்து இருக்கிறாய் !!
என்ன குற்றம் செய்ய வேண்டும் ..
அந்த சிறையில் நானும் அடைபட !!!
.
.
.
ஆமாம் ..! அது என்ன சிகப்பு சிக்னல் ?
                              ( சிகப்பு பொட்டு )
தெரிந்துதான் வைத்துள்ளாயா ?
என்னாலும்  இந்த சிக்னலை சட்டென்று கடக்க முடியவில்லை ..
விதியே மீறி செல்லவும் விருப்பமில்லை !
 
****

ஆயிரம் கண்களை கடந்து இருப்பேன் !
இப்போது தான் காண்கிறேன் ..
முதல் கண்ணை ( likes an gun )
என் முன்னே !
அந்த கண் (gun ) ...துளைத்து விடுகிறது
எளிதாக ...
இறுகிப்போன என் கல் மனதையும் !
 
****

என்னை !
இந்த உலகத்தை மறக்க செய்துவிட்டு ..
உன் முகத்தை ஏனடி மறைக்கிறாய் ?
ஆடையினால் ...
என்னடி நீயும் !
இது என்ன நியாயம் ?
மாய தாரகையே !
நீ ...
யாருடைய மங்கையே ?


                                         

Sunday, 12 November 2017

கர்வம் அழிந்ததடி - 2 ! (A BOY WAITING FOR U )






இமை மூடியும்  வருகிறாய் ..
கனவிலே யுத்தம் செய்கிறாய் !
தினந்தோறும் ..
ஏனடி என்னை கொல்கிறாய் !!


நீ நீயாக இருந்தபோது ...
காதல் செய்தேன் !
நீயே இப்போது இல்லையென்றால் ...
நானும் என்ன செய்வேன் ..
............ எங்கே போவேன் !!



உன் அழுகை வந்தாலே..
நான் துடைப்பேனடி !
என் அழுகைக்கு காரணம்..
நீ என்பதையும் மறந்தேனடி !!



நான் கேட்கும் இசையெல்லாம் ..
ஒரே கீதம் !
அன்று..நீ சொன்ன வார்த்தை மட்டும் ..
என் கனவு தேசத்திற்கு தேசிய கீதம் !!



மழையாக நீ என்னை ..
நனைக்க வந்தாய் !
அணை கட்டி காக்கும் முன்பே..
விலகி சென்றாய் !!



சிறகு உடைந்த பறவையாக ..
நானும் இப்போ ...
.
.
உன்னருகே !!
பறந்திட போவது எப்போ ??



உன் கரம் கோர்த்து ...
நானும் !
நெடுந்தூரம் நடக்க வேணுமடி ...
.
.
கனவிலும் இது நடக்காது என்றால் ..
மனதினில் !
என்ன என்னமோ செய்ய தோணுதடி ...




எப்படி சொல்லிடுவேன் ..
என் வலியினை வார்த்தைகளால் !
உனக்கும் வேண்டாமடி இது ..
.
.
கடவுளிடம் கேட்டுகொள்கிறேன் ..
என் பிரார்தனைகளால் !!



நீ தந்த நினைவுகளை போதுமடி ..
என் வாழ்வின் மீதமும் ஏதோ போகுதடி ...
..
மொத்தத்தில் நான் கொண்ட ..
கர்வம் அழிந்ததடி !!
..
..
இப்போதாவது ..பெண்ணே ..
என் காதல் உனக்கு புரிந்ததா...டி ??

Monday, 30 October 2017

"மழையும் ! இவர்களும் ! "

அரை மணி நேரமாக மழையே வேடிக்கை பார்த்த நான்...என்னைப் போல் மற்றவர்கள் இதை நேரத்தில் என்ன செய்வார்கள் ...என்று எண்ணி..
       
              "மழையும் ! இவர்களும்! "

** பயிர் இடுவதற்காக நிலத்தை உழுது கொண்டிருந்த உழவன் ..முதல் மழைத்துளி அவன் வேர்வை படிந்த மார்பில் விழுந்த கணம் ...தலையில் இருந்த துண்டை கழற்றி..வானத்தை பார்த்து கை எடுத்து கும்பிட்டு..மண்ணை பூசிக் கொள்ளலாம்..நெற்றியில் !

** கடலுக்கு மீன் பிடிக்க சென்ற கணவன் பத்திரமாக கரைக்கு வர வேண்டும் என தன் கழுத்தில் தொங்கும் மஞ்சள் நிற தாலி கயிற்றை கண்ணில் வைத்து இறைவனை வேண்டலாம் ..

** மழையில் நனைந்து விட்ட விறகுகட்டையே அடுப்பிற்குள் திணித்து அதை பற்ற வைக்க தன் பாதி உயிரை கொடுத்து ஊதி கொண்டிருக்கலாம் அந்த கிளவி ...

** ஐடி தொழில்நுட்பத்தில் வேலை பார்க்கும் பெண் ஒருத்தி கையில் தேநீர் கோப்பையுடன் அந்த கண்ணாடி மாளிகையிலிருந்து வேடிக்கை பார்க்கலாம்...

** ஆற்றின் ஓரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை அறிவிக்கப்படலாம்..

** கையில் பிடிக்க முடியாத அளவுக்கு பிஸியாக இருக்கும் நடிகையின் கால்சீட் பெற்று படப்பிடப்பு நடந்துகொண்டிருக்கும் போது ..மழையின் குறுக்கீட்டால் பேக் அப் என டைரக்டர் கத்த ..வேறு வழி இல்லாமல் தயாரிப்பாளர் கவலையடையலாம்..

** டேய்...நம்ம மாவட்டத்துக்கு இன்னிக்கு ஸ்கூல் லீவு டா ...என மகிழ்ச்சியில் பள்ளி மாணவன் துள்ளி குதிக்கலாம்...

** என்னடா ...? நம்ம மாவட்டத்துக்கு லீவு இல்ல என நண்பன் கவலையடைய...இந்த செய்தி வாசிக்கிற ஆளு சரியில்லடா...இவருக்கு முன்னாடி இருந்த ரமணன் லீவு விட்டுட்டு தான் மழை வருமா ? வராதானே? சொல்லுவாரு..என அவனை தேற்றிக் கொண்டிருக்கலாம்....

** மர குடிசையில் ஒழுகும் நீருக்காக ஒரு பாத்திரத்தை எடுத்து வைத்துக் கொண்டிருக்கும் அம்மாவை....யம்மா...அங்கேயும் ஒழுகுதுனு பிள்ளை சொல்லலாம் !

** கையேந்திபவன் கடையின் முதலாளிகள் எல்லாம்...இன்னிக்கு பொழப்பு போச்சுனு கவலையடையலாம்..

**சாதி,மத வேறுபாடு மறந்து.. மழைக்காக அத்தனை சாதியினரும் ஒரே இடத்தில் தஞ்சம் அடையலாம்...

** மின்சாரதுறை அதிகாரி..மழை வருதா ? அங்க வையர் கட் ஆயிடுச்சு..இங்க கட் ஆயிடுச்சு என போன் வருமே ..என சலித்துக் கொள்ளலாம்...

** வெளியே செல்வதற்காக...குடையே தேடி கொண்டிருக்கலாம் பெரியவர் ஒருவர்...

** குளிருக்கு இதமாக ...தலையனைக்கு அடியில் மறைத்து வைத்திருக்கும் சிகரெட்டை பாத்ரூமிற்கு கொண்டு சென்று ..வட்டம் வட்டமாக புகையிடலாம் அந்த இளைஞன்...

** மாடியில் நேற்று காய்வதற்காக போட்ட துணியே அள்ள மூச்சு வாங்க மாடி படியில் ஏறிக் கொண்டிருக்கலாம்..

** கடைக்கு சென்ற பெண் ...முழுவதுமாக
நனைந்து ..அவளது ஆடை தோலுக்கு தோலாக காட்சியளிக்க...அந்த கவர்ச்சியே சீண்டும் ஓநாய்களிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள வேகமாக வீட்டை நோக்கி நடக்கலாம்..

** மச்சான் ....செம க்ளைமேட்... பீர் அடிக்கலாம் வாடா என நண்பனை போன் போட்டு துணைக்கு ஆள் சேர்க்கலாம்....

** அமைச்சர் பெருமக்கள் எல்லாம்..போன வருடம் மாதிரி மழை பெய்து அரசுக்கு களங்கம் ஏற்படுத்திட வேண்டாம் என வருணபகவானை வணங்கி கொண்டிருக்கலாம்....

** மழையிலிருந்து தன் ஆண்ட்ராய்டு மொபைலை காப்பாற்ற பாலித்தீன் பைக்குள் சுருட்டி வைத்துக் கொண்டிருக்கலாம்...

** குடை பிடித்து நடந்து சென்று கொண்டிருக்கும் போது..எதிரே வந்த கார்.. பள்ளத்தில் சீறும் போது ...தன் சட்டையில் படிந்த சேறினால்..அந்த கார் ஓட்டியே வசை பாடலாம் ஒருவர்...

** கொட்டும் மழையிலும்..ரெயின் கோர்ட் அணிந்து தன் கடமையே ஆற்றும் டிராபிக் போலீஸ்..

** பைக்கில் சுற்றிய காதலர்கள்...மழைக்காக ஒதுங்க ..அங்க அவர்கள் தோல் உரசி ...புதியதாக முத்த மழை அங்கே பெய்யலாம்...

** வகுப்பறையில் ப்ரேக் முடித்து விட்டு வந்த மூன்றாம் வகுப்பு மாணவன்...கொஞ்சம் நேரம் கழித்து...டீச்சர்..ஒன்னுகு வருது ! என கேட்க.... தோழிகள் சிரிக்க...டீச்சர் இப்பதானாட போய்ட்டு வந்த என அரட்ட..அடக்க முடியாமல் அடக்கிக் கொண்டிருக்கலாம்...

** மழையிலிருந்து வீட்டிற்குள் சேற்றுகாலுடன் உள்ளே நுழையும் கணவன்மார்களை ,மனைவிமார்கள் வறுத்துக் கொண்டிருக்கலாம்...

** அப்பா ! ஆபீஸ் க்கு ...குடை எடுத்துட்டு போகல..பஸ் ஸ்டாப்ல வெயிட் பண்றேன்...சீக்கிரம் வாங்க என செல்ல மகள் அப்பாவிடம் போன் செய்து கொண்டிருக்கலாம்

** மழை வந்ததுமே ! இரண்டு மூன்று போர்வைகளை உடல் முழுக்க சுற்றிக்கொண்டு தூங்கும் வேலையில்லா பட்டதாரிகளும் இருக்கலாம்..

** உதவியாளரை அழைத்து, நம்ம வாத்தியார் கடையில சூடா ஒரு ரெண்டு மிளகாய் பச்சி,ஒரு கீரின் டீ வாங்கிக்கிட்டு உங்களுக்கும் ஏதாவது வாங்கிக் கொள்ளுங்கள் என தன் சட்டை பையிலிருந்து பணத்தை எடுக்கலாம் ..பேங்க் மேனேஐர்...

** கொட்டும் மழையிலும், சிக்கனலுக்காக காத்திருக்கலாம்..மெட்ரோ வாகன ஓட்டிகள்.

** பெண்ணின் சுதந்திரத்தை காட்ட ஆசைதீர மொட்டை மாடி மழையில் நனைந்து தீர்த்துக் கொண்டிருக்கலாம்..

** இன்னும்,ஏதோ ஒரு மூலையில்...நமது மனித உலக பாரம்பரியமான காகித கத்தி கப்பல் செய்து நீரில் விடலாம்...

** அடேய்...போதும்டா...என இந்த பதிவை மூடி விட்டு மழையே நீங்களும் ரசிக்க தயாராகலாம்..!

Saturday, 28 October 2017

உழவுக்கு உயிரூட்டு

இறங்குவோம் நாமும்...
இறங்குவோம்...
சேற்றிலே நாமும் இறங்குவோம் !

தொடருவோம் நாமும்...
தொடருவோம்...
பாட்டனின் வேலையே இனிதே தொடருவோம் !

நெருங்குவோம் நாமும் ...
நெருங்குவோம்...
கலாம் கண்ட கனவே நெருங்குவோம்!

எங்கடா படிச்சான் ?..
இருந்தாலும் விதைச்சான் !
நமக்காகவே உழைச்சான் ...
மொத்ததையும் தொலைச்சான் !

வச்சு வச்சு திங்குறான்டா பழைய சோறா...
உனக்கு மட்டும் கேட்குதடா கூலிங் பீறா...

பருவம் பார்த்து விதைச்சான்டா நிலத்துல..
கடன் வாங்கியே தொங்குனான்டா கயித்துல....












டாக்டர் பிள்ளை ,போலீஸ் பிள்ளைனா ..
பெருமைப்படுறீயே !!
இன்னார் பிள்ளைனு சொல்ல மட்டும் வெக்கப்படுறீயே !!


வந்து வந்து விழுறீயடா இன்ஜீனியரு...
உனக்கு ...!
நிலாவிலும் வேலை இல்ல... வேணும்னா கேட்டு பாரு..


தெருக்கு தெரு வைக்கிற ஓவியா ஆர்மி...
போன போகுது !
உன்அறிவை கொஞ்சம் இந்த நிலத்துலையும் காமி....


Meme போட்டு மெர்சல் பண்ணது போதும் சாமி !!
முடிந்த அளவு உருவாக்கிடு பசுமை பூமி !!


அவனுக்கு தேவையிங்கறது எல்லாம் இங்க தண்ணீரு...
வானத்தை பார்த்து பார்த்தே
வந்து நிற்குது கண்ணீரு...


உழவனுக்கு கரம் கொடுப்போம் !
மண்ணிற்கு உயிர் தருவோம் ....

இறங்குவோம் நாமும்..
இறங்குவோம்....!



Saturday, 21 October 2017

கர்வம் அழிந்ததடி !!

அந்தி மாலைப்பொழுது...
இளஞ்சூட்டில் ஆவி பறக்கிறது !
என் வலது கையின் விரல்களுக்கிடையே...
அகப்பட்ட தேநீர் கோப்பையிலிருந்து !!

கருநிற புட்களை போல காட்சியளிக்கும் ..
தாடியை தடவிகொண்டு !
மூக்கு கண்ணாடியை சரி செய்து ..
ஜன்னல்லை திறந்து வெளி நீட்டுகிறேன் ...
என் இடது கையை !!

யாரோ ? தண்ணீர் தெளிப்பது போல் ..
மழைச்சாரல் என் கைகளில் விழுகிறது !
ஒரு கையில் உஷ்ணம் ...
மறு கையில் இதமாக ஒரு சுகம் !!
இதை விட சிறந்த தருணம் இருக்குமா ??

கர்வம் கொள்கிறேன் !!
இந்த மாலைப் பொழுதின் மயக்கத்திலே....
.
.
.
.
.
மறுநாளே ..நண்பகல் நேரம்...
கொளுத்தும் வெயிலுக்காக !
இளநீர் பருகுகிறேன் ...
பேருந்து நிழற்குடையின் நிழலில் நின்று !!

எப்போதும் போல்...
பேருந்து நிறுத்தத்தை தாண்டி..
நிற்கிறது ஓர் பேருந்து !
ஒரே ஒரு கிளவி மட்டும்..
சாக்கு பையுடன் இறங்குகிறாள் !!
அந்த நிறுத்தத்தில்..

ஏதோ ? ஒன்று ! அந்த ,
பேருந்தின் ஜன்னல் ஒர கம்பிகளுக்கிடையே பிரகாசிக்கின்றது !!
ஆம் ..ஓர் பதுமை அங்கே ...
இவளது பொலிவில் மங்கியது!
சூரியனின் பொலிவும் ...

பருகிக் கொண்டிருந்த இளநீர் !
தீர்ந்தப்பின்னும் ...இன்னும்....
உறிஞ்சுக் கொண்டிருக்கிறேன் மெய்மறந்து.
அந்த மட்டையே !!

உடலின் உஷ்ணம் அதிகரிக்கிறது !
இளநீர் உள்ளே போன பிறகும் ...
உஷ்ணத்திற்கு காரணம் ..அவளை ..
கண்ட காம மோகத்தினால் அல்ல !
ஓர் பிரபஞ்சத்தை கண்ணருகில்...
பார்த்ததால் !!

நேற்று தான் கர்வம் கொண்டேன் ...
அந்த...மாலைப் பொழுதின் மயக்கத்திலே !
இன்று உன்னால்...
அந்த கர்வம் அழிந்ததடி...
உன்னாலே ...
கர்வம் அழிந்ததடி !!!!
.
.
.
.
.

நடத்துனரின் விசில் சத்தம் !
அடுத்த நிறுத்தத்தை நோக்கி நகர்கிறது..
பேருந்து மெல்ல !!
ஆம் ! இந்த பேருந்து எங்கே போகிறது என்று தெரியவில்லை ...??
ஆனால் ! என் எஞ்சிய நாட்கள் இவளுடன்தான் போக வேண்டும் என ஏறிவிட்டேன் இந்த பேருந்தில் ....

அந்த பிரபஞ்சத்தை தரிசனம் செய்ய..
கட்டணம் 10 ரூபாய் !

கூட்டம் இல்லாத அந்த பேருந்தும்...
என் கற்பனைகளுக்கு !
விழாக்கோலம் போல் காட்சியளிக்கிறது ...
என் திருமண விழாவாக ...
அய்யோடா..என்ன அழகு அவ !!

அவளது தலை முடியை ..
ஆக்கிரமித்து இருக்கும் அந்த..
குண்டு மல்லிகை பூவிலும் !!
அவளின் அழகை கவுரவிக்கும் பொருட்டு.
அவளை படர்திருக்கும் அந்த ...
பட்டுசரிகையிலும் !!
நெற்றியல் இட்டிருக்கும் குங்குமச்சிமிலிலும் ..

ஒரு நிமிஷம் !! இந்த தோற்றத்தை....
இதற்கு முன் எங்கோ கண்டுள்ளேன் ?
அட....என் அழகு தங்கச்சி ....

இவ்வளவு காலம் கர்வம் கொண்டிருந்தேன்! தங்கச்சியின் அழகில் !!
அத்தனையும் ஒரிரு நொடியில்...
தகடுபொடியாக்கி விட்டாய் ...
உண்மையில் கர்வம் அழிந்ததடி !!
உன்னாலே ...
கர்வம் அழிந்ததடி !!.....
.
.
.
.
.
ஏதோ ? ஓர் பேருந்து நிறுத்தம் வருகிறது ...
விலகி இருந்த தலைமுடியை கோரி...
காதருகில் சொருகிக் கொண்டு !!
இறங்கிவிட்டாள் .!
கிறங்கிவிட்டேன் ..நானும் அந்த நொடியில் !! என்ன பொண்ணுடா அவ ...

முன்னோக்கி அவள் நடக்கிறாள் ...
அவள் நிழலிற்கு நிழலாக...
எனதும் நிழலும் குடை பிடித்து வருகிறது .!

சார் பதிவாளர் (register Office) அலுவலகத்திற்குள் நுழைகிறாள் ...
நுழைந்தது தான் தாமதம் ..!
அவளை மொய்க்கிறது
தோழிகளின் கூட்டம் .....
இவளின் முகத்திலும்
அப்படியொரு  புன்னகை !!!

நின்றுவிட்டேன் ...அந்த ...
அழகியே தூரத்திலிருந்து ரசிக்கலாம் என..!
அங்கு இருந்த வேப்ப மரத்தடியில் ...

அவள் அலுவலக அறைக்குள் போய் ...
26 நிமிடம் ஆகிறது..என் வயதைப் போல்..
நடக்கும்போது...காற்றில்..
அசைந்த அவளது கைகள் !!!
இப்போது...இப்போது.....??

இறுக்கமாக ஒருவனின் கையை பற்றிக்கொண்டு வருகிறது ....
அந்த அறையே விட்டு !!
நான் முன்பு கண்ட ..அத்தனை அழகும் !!
குறையாமலும்,கலையாமலும் இருக்கிறது...

என்ன ?? கூடுதலாக ...கழுத்தில்...
மாலையும்,தாலியும் காட்சியளிக்கிறது !!
ஒ.ஒ. கல்யாணம் அவளுக்குதான் போல..

அவளது கண்ணீல் கண்ணீர்...
இது பெயர் ஆனந்த கண்ணீர்ல !!!
எனது உதட்டோரத்தில் மெல்லிய புன்னகை !!!
இதுக்கு பெயர் என்ன ????

ஆஆஆஆஆஆஆஆஆஆ !

ம்ம்ம்ம்ம்ம்ம் !!! சரி ..

முதல் காதலும் முடிந்ததடி ....
என் கனவுகளும் சிதைந்ததடி....
உன்னால்
நான் கொண்ட அத்தனை....

கர்வமும் அழிந்ததடி .!!
பெண்ணே ...உன்னாலே....
என் கர்வம் அழிந்ததடி !!!

Sunday, 15 October 2017

தனிமை - my explanation!

முதலில் தனிமையே விரும்பாத கூட்டத்தினரின் கண்ணோட்டத்தில் ::::

தாயும் இருந்தும் , தந்தை இருந்தும் !
தனியாக தான் இருக்கிறான் !

தனிமை - தன் + இனிமை !

தன்னை மட்டும் நேசித்து இவர்கள் இனிமை அடைகிறார்களா ? இது சாத்தியாமா ?
எப்படியும் ஒரு நாள் ... இந்த தனிமை நேசிக்கின்ற அத்தனை கோமாளிகளுக்கும் தாரம் என்ற பெயரில் ஒருத்தி வர தான் போகிறாள் ! அப்போது என்ன செய்வார்கள் ? இவர்கள் எல்லாம் முன் ஜென்மத்தில் நாம் சொல்லும் வேற்று கிரவாசிகளாக தான் இருந்திருக்க வேண்டும்.

இவர்கள் அடிக்கடி சொல்லும் feeling it alone என்பது எல்லாம் விதாண்டவாதம் தான் ! Leave me alone என்பது தான் இவர்களின் தாரக மந்திரம் ....

தனிமையே நேசிப்பவன் எல்லாம் அறிவாளியாவோ ? பெரிய இவன் ! என்ற நெனைப்போ என்னமோ ? இவர்களுக்கு !!! சொந்த காரன கூட வேண்டா விருப்பாக தான் பார்ப்பார்கள் !

எதையும் வெளியில சொல்ல மாட்டங்க ..அத்தனை ஆசை ,கவலை,ஏன் ? மகிழ்ச்சியை கூட அடைத்து கொள்வார்கள் ! இவர்களுக்கு மட்டும் இதயத்தின் அளவு பெரியதோ ? ஒருநாள் வெடிக்க தான் போகுது .....

கிடைத்த வாழ்க்கையே வாழ தெரியாத பைத்தியங்கள் !

தனிமைவாதிகள் **::

இங்கு நாங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் அல்ல ! ஒதுங்கி நிற்கவே ஆசை படுகிற கூட்டதினர் ...

உங்களை போல நாங்களும் எல்லாம் கொண்டவர்கள் தான் ...அம்மா,அப்பா,சொந்தம்,நட்பு,பாசம்,ஆசை,காதல்,கோபம் இன்னும் நீங்க எதை எல்லாம் வச்சு இருக்கீங்ளோ ? அது எங்களிடமும் இருக்கு ! என்ன ..இதுல எதுமே எங்களுக்கு முழுசா கிடைக்கலா ?

ஏங்கி போய் தான் இருக்கோம் ! ஏதாவது முழுசா கிடைச்சிடாதானு ? எங்களுடைய கனவு ,கற்பனை ,எதாவது நடக்காதனு தவிச்சு போய் இருக்கோம் ....
நாங்க இங்க அமைதியாக எல்லாம் இல்லை ! நிறைய பேசுகிறோம் ...எங்கள் மனதோடு,அந்த காற்று,இசை,புத்தகங்களோடு...

ஒன்னு நீங்க(தனிமையே விரும்பாதவர்கள்).... எங்களை புரிந்து கொள்ளுங்கள்..இல்லை ...நாங்கள் வாழ்க்கையே புரிந்து கொள்ளும் வரை எங்களை எங்கள் போக்கில் விட்டு விடுங்கள் !

Saturday, 30 September 2017

மழையும் நானும் !

நடுநிசியில் பெய்த கனமழையில்..
வெந்திருந்த ஊர் தணிந்தது..
இந்த அதிகாலை பொழுதில்!
அந்த மெல்லிய சாரலில் ..
ஓர் நடைபயணம் மொட்டை மாடியில்....
அதில் நான் காண்பவை ;;;
எவனோ பைத்தியக்காரன் !
பெண்கள் இல்லாத வீட்டில்...
வாசல் தெளிப்பதே அரிது...
இதில்,மொட்டை மாடியேவே தெளிச்சிருக்கான் ....
மாடியில் தேங்கிய தண்ணீர்
குப்பைகளால் அடைபட்ட குழாயின் வழியே..
செல்ல முடியாமல் திணறுகிறது !
(ஒரு நிமிடம் எடுத்து விட்டு வந்துடுறேன்)
அடுத்து!!
அடுத்த பேய் மழை வருவதற்குள் ...
உடலை குலுக்கி எடுத்து ,சிறகை விரித்து
குளிர்காயும் காக்கா !
(நான் வேணும்னா துண்டு (towel) எடுத்துட்டு போகவா )
ஊடலுக்காக இணங்கும் ஒரு ஆண் வெறிநாய் கூட்டம் !
அதுவும் ஒரே ஒரு பெண் நாயிடம் !
Omg ! Its gang rape ....
பெண் அனுமதி இல்லாமல் தொடாதீர்கள் !
அது நாயாக இருப்பினும்...
என advise மட்டும் தான் கொடுக்க இயலுகிறது !
முடிந்தால் கல்லை எறிந்து ஆட்டையே கலைக்கலாம் ! பொறுத்திருந்து பார்க்கலாம் ...
நேற்று இருந்த இடத்தில் இருந்து ..
மரங்கள் எல்லாம் ஒரு பக்கமா சாய்ந்துள்ளது !
வீசி தள்ளிய காற்றில்....
நானும் முடிந்த அளவு தள்ளினேன் !!
நகர்வது மாதிரி தெரியவில்லை ....
சாலைகளில் ஆங்காங்கே இருக்கும்
குட்டைகளில் தேங்கிய மழைநீரை...
சமூக அக்கறையுடன் வெளியேற்ற...
சீறிட்டு பறக்கும் கார் ..
நல்ல வேளை அதன் அருகில் எவனும்
நடக்கவில்லை ! Super bro
மாடியே உரசிக் கொண்டிருக்கும்
பாப்பாளி மரத்தின் இலைகளில்
சின்ன சின்னதாய் நீர் குமிழிகள்!
விரலின் நூனியிலே உடைத்து தள்ளுகிறேன் !
ஈஈஈஈஈஈஈஈஈ
ஆக மொத்தம் இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட ஒரு நல்ல காலை பொழுது !
Good morning ...
             
                                @its_muthu